Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

7 சிறப்பு ரயில்கள் வரும் 31 வரை ரத்து :

சென்னை

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருப்பதால், சிறப்பு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை எழும்பூர் - மன்னார்குடி (06179), கண்ணூர் - கோயம்புத்தூர் (06607/06608), ஆலப்புழா - கண்ணூர் (06307/06308), சென்னை எழும்பூர் - திருச்சி (06795/06796) ஆகிய சிறப்பு ரயில்களின் சேவை இன்று முதல் வரும் 31-ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது. மன்னார்குடி - சென்னை எழும்பூர் (06180) சிறப்பு ரயில் சேவை நாளை முதல் ஜூன் 1-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x