Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

முதல்வரின் 4 செயலர்களுக்கும் துறை ஒதுக்கீடு :

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலர்கள் 4 பேர் கவனிக்கும் துறைகள் பட்டியல் வெளியானது.

தமிழக முதல்வர் ஸ்டாலினின்தனிச் செயலர்களாக டி.உதயசந்திரன், பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் கவனிக்கும் துறைகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பொது, ஊழல் தடுப்பு ஆணையம், தகவல் தொழில்நுட்பம், உள்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி, சிறப்பு திட்ட செயலாக்கம், தொழில், திட்டம் மற்றும் வளர்ச்சி, அறநிலையங்கள் ஆகிய துறைகளை முதன்மை செயலர் உதயசந்திரன் கண்காணிப்பார்.

எரிசக்தி, உணவு, சிறப்பு முயற்சிகள், மருத்துவம், போக்குவரத்து, வணிகவரி மற்றும் பதிவு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி (கட்டிடம்), நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகம், நீர்வளத்துறை, நிதி ஆகிய துறைகளை செயலர் -2பி.உமாநாத்தும், மனித வளம், கூட்டுறவு, வருவாய், வீட்டுவசதி, சட்டப்பேரவை, ஊரக வளர்ச்சி, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தி, தொழிலாளர் நலம், வேளாண்துறை, சட்டம், முதல்வர் அலுவலக ஒட்டுமொத்த நிர்வாகம் ஆகியவற்றை செயலர்-3 எம்.எஸ்.சண்முகமும் கவனிக்கின்றனர்.

முதல்வரின் செயலர்-4 அனுஜார்ஜ், சுற்றுச்சூழல், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்,சிறு தொழில்கள், இளைஞர் நலன்,விளையாட்டு, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சமூக நலம், கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வளம், கைத்தறி, ஜவுளி, சுற்றுலா, கலாச்சாரம், சமூக மறுமலர்ச்சி, மாற்றுத் திறனாளிகள் நலன், அரசியல் தவிர்த்து முதல்வரின் இதர சந்திப்புகள், பயண ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை கவனிப்பார்.

இதை முதன்மைச் செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x