Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

காங்கிரஸ், விசிக அபாரம் :

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 17 இடங்களிலும், 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களிலும் அமோக வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2011-ல் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களிலும், 2016-ல் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களிலும் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இவ்வாறு காங்கிரஸ் மிகக் குறைவான இடங்களில் வென்றதால்தான் 2016-ல் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நூலிழையில் திமுக இழந்ததாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 17 இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் 2006-க்கு பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிக எண்ணிக்கையில் சட்டப்பேரவையில் இடம்பெறுகின்றனர். இதனால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விசிகவினர் மகிழ்ச்சி

திமுக கூட்டணியில் தனி சின்னத்தில் (பானை) 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, 4 தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளது.

கடந்த 2001-ல் திமுக சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் முதன்முதலாக எம்எல்ஏ ஆனார். 2006-ல் அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 2-ல் வென்றது. 2011-ல் திமுக, 2016-ல்மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற விசிகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு விசிக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர். இதனால் அக்கட்சியினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x