Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

குடும்பத்துக்கு பக்கபலமாகவும், துணையாகவும் நின்ற - மத்திய, மாநில அரசுகள், ரசிகர்களுக்கு விவேக் மனைவி நெகிழ்ச்சியுடன் நன்றி :

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி மத்திய, மாநில அரசுகளுக்கும், காவல், ஊடகத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் (59), மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், விவேக் மனைவிஅருள்செல்வி, தனது 2 மகள்களுடன் இணைந்து சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

கணவரை இழந்து நிற்கும் நேரத்தில், எங்கள் குடும்பத்துக்கு பக்கபலமாகவும், மிகப்பெரும் துணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு மனமார்ந்த நன்றி. என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதை என்றைக்கும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம். இது என் கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

கடைசிவரை எங்களுடன் நின்ற காவல் துறை, ஊடகத் துறை சகோதரர்களுக்கும் நன்றி. உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மற்றும் இறுதிச் சடங்கின்போது வெகுதூரம் என் கணவருடன் கடைசி வரை வந்த அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x