Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

முதல்வர் குறித்து தரக்குறைவான பேச்சு - ஆ.ராசா மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு : தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

முதல்வர் பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசியது தொடர்பாக திமுக துணை பொதுச் செய லாளர் ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுகவேட்பாளர் எழிலனை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளரான ஆ.ராசா எம்.பி., தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, முதல்வர் பழனிசாமி குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், தரக்குறைவாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். புகாரில் முகாந்திரம் இருப்பது தெரியவரவே, ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

294 (பி) அவதூறாக பேசுதல், 153 (இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் பேசுதல்), தேர்தல் நடத்தை விதியை மீறுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ராசா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர், மீன்சுருட்டியில் கடந்த 26-ம் தேதி நடந்த பிரச்சார கூட்டங்களில் முதல்வரை தரக்குறைவாக பேசியதாக ஆ.ராசாமீது அந்தந்த காவல் நிலையங்களில் விஏஓக்கள் கொடுத்த புகார்களின்பேரில் ராசா மீது 3 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் புகார்

தமிழக முதல்வரையும் அவரது தாயாரையும் அவமரியாதை செய்யும் வகையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவுஇணை செயலாளர் ஆர்.எம்.பாபு முருகேவல் அனுப்பிய மனு:

கடந்த 26-ம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய திமுக நட்சத்திரப் பேச்சாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, பிரச்சாரத்தின்போது தமிழக முதல்வரையும் அவரது தாயாரையும் அவமரியாதை செய்யும் வகையில் பேசியுள்ளார். அவரது அநாகரிகமான பேச்சும் விமர்சனமும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக் கக்கூடியதுமாகவும் உள்ளது.

அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் சமூக நல அமைப்புகளும், பெண்ணிய அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இது மேலும் பரவாமலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமலும் இருக்கும் வகையில் ஆ.ராசா மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x