Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM

காலநீட்டிப்பு கோர விசாரணை ஆணையம் முடிவு

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280 கோடிஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக ஒய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான 7 பேர்கொண்ட ஆணையம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து விசாரணைக்குழு அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சுரப்பா மீது புகார் அளித்தவர்களிடம் விசாரணை செய்துவிட்டோம். எனினும்,ஒரு சில புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மறுபுறம் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை சமர்பிப்பதில் அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. மேலும், சுரப்பா உட்பட சிலஅதிகாரிகளிடமும் விசாரணை நடத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் விசாரணைக்கான காலஅவகாசத்தை நீட்டிக்க அரசிடம் அனுமதி கோர முடிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x