Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு குரூப்-2, குரூப்-4 உட்பட 42 தேர்வுக்கு அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதில் குரூப்-2 தேர்வு, குரூப்-4 தேர்வு உட்பட 42 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

2021-ம் ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது.

அதில், தோட்டக்கலை உதவி இயக்குநர் தேர்வு, உதவி வேளாண் அதிகாரி தேர்வு, வேளாண் விரிவாக்க அலுவலர் தேர்வு, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு, உதவி கால்நடை மருத்துவர் தேர்வு, மீன்வளத்துறை உதவி இயக்குநர் தேர்வு, கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் தேர்வு, குரூப்-2, மற்றும் 2-ஏ தேர்வு, உதவி ஜெயிலர் தேர்வு, இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வுகள், குரூப்-2 தேர்வு வனச்சரகர் தேர்வு, மாவட்ட கல்வி அதிகாரி தேர்வு, உளவியல் நிபுணர் தேர்வு, தொழிலாளர் உதவி ஆணையர் தேர்வு உட்பட 42 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்பும் எந்த மாதத்தில் வெளியிடப்படும் என்ற விவரத்தையும் அதில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x