Published : 07 Dec 2020 03:14 AM
Last Updated : 07 Dec 2020 03:14 AM

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு:அரசு பணிக்கு காத்திருக்கும் 63 லட்சம் பேர்

சென்னை: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு, தொழிற்கல்வி முடிப்பவர்கள் தங்கள் கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வார்கள். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தப் பதிவை புதுப்பிக்க வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும்.

இந்நிலையில், 30.11.2020 அன்று நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் 63 லட்சத்து 41 ஆயிரத்து 639 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 915 பேர் பிஎட் பட்டதாரிகள். 2 லட்சத்து 21 ஆயிரத்து 337 பேர் பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள். 2 லட்சத்து 6 ஆயிரத்து 807 பேர் 807 பேர் பொறியியல் பட்டதாரிகள். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 447 பேர் இடைநிலை ஆசிரியர்கள்.அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 63 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் தனியார் நிறுவனங்களில் வேலைபார்த்து வருவோராக இருப்பார்கள். 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் பதிவுதாரர்கள் தற்போது எந்த வேலையிலும் இல்லாத பட்சத்தில் 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை தரப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x