Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வர6 நாட்களுக்கு இ-பதிவு தேவையில்லை

கிருஷ்ணகிரி: கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு இ-பதிவு இன்றி பயணம் மேற்கொள்ள 6 நாட்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பதிவு பெற்றே வர வேண்டிய நடைமுறை உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் 6 நாட்கள் பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசு போக்குவரத்துக் கழகங்களின் பரஸ்பர உடன்படிக்கையின்படி, தீபாவளி பண்டிகையையொட்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்து, தமிழகத்துக்கு 11-ம் தேதியிலிருந்து (நேற்று) 16-ம் தேதி வரை இ-பதிவு இன்றி பயணம் செய்வதற்கு, வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x