Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.54 லட்சம் உண்டியல் காணிக்கை :

மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் திறப்பு இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மு.விஜயன் முன்னிலையில் கண்காணிப்பாளர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரூ.54 லட்சத்து 38 ஆயிரத்து 266 ரொக்கம், 323 கிராம் தங்க நகைகள், 815 கிராம் வெள்ளிப்பொருட்கள், 34 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் வரப்பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x