Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

முத்தூரில் ரூ.1.43 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் :

வெள்ளகோவில்: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.43 லட்சத்துக்கு தேங்காயும், ரூ. ஒரு லட்சத்துக்கு கொப்பரையும் ஏலம் போனது.

இதுதொடர்பாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ரங்கன் கூறும்போது, ‘‘வெள்ளகோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 55 விவசாயிகள் பங்கேற்று, 15,296 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

முதல் தரம் ஒரு கிலோ ரூ.29.30-க்கும், 2-ம் தரம் ரூ.23.65-க்கும், சராசரியாக ரூ.28.30-க்கும் ஏலம் போனது. 4 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 43 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதேபோல கொப்பரை ஏலத்துக்கு 1,121 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100.70-க்கும், குறைந்தபட்சமாக ரூ.76.10-க்கும் ஏலம் போனது. 1,121 கிலோ கொப்பரை ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதில், 47 விவசாயிகள் பங்கேற்றனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x