Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM

‘கரோனா கட்டுப்பாடு எங்களுக்கு இல்லை' - சீசனுக்கு முன்பே வேட்டங்குடியில் திரண்ட வெளிநாட்டு பறவைகள் :

திருப்பத்தூா்

சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூா் அருகேயுள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு சீசனுக்கு முன்னதாகவே வெளி நாட்டுப் பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கி உள்ளன.

திருப்பத்தூா் அருகே கொள்ளு குடிப்பட்டி கண்மாயில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சர ணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாத இறுதி, அக்டோபர் மாதங்களில் பல ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் வெளி மாநிலப் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வருவது வழக்கம். மீண்டும் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் அந்தப் பறவைகள் குஞ்சுகளுடன் இருப்பிடங் களுக்குத் திரும்பிச் சென்று விடும்.

நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் இருந்து தொடா்ந்து அவ்வப்போது மழை பெய்து வருவதால், சர ணாலயம் அமைந்துள்ள கண்மாய் முழுவதும் பசுமை போா்த்தி யதுபோல் காணப்படு கிறது. இதனால் சீசனுக்கு முன்பே ஜூலை மாதத்தில் இருந்து உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை போன்ற வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன.

திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள அரிய வகை பறவைகள். இதனால் சுற்றியுள்ள கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கொள்ளுகுடிபட்டி கிராமமக்கள் கூறியதாவது:

நடப்பாண்டில் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் பரவ லாக மழை பெய்துள்ளது. இத னால் ஜூலை மாதம் தொடக் கத்திலேயே பறவைகள் வரத் தொடங்கிவிட்டன. இங்கு பாம்பு தாரா, நத்தை கொக்கி நாரை, மார்கழியன், கருநீல அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 10 வகையான பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன. அவற்றை பாதுகாக்க எப்போதும்போல, இந்தாண்டும் தீபாவளியை வெடி வெடித்துக் கொண்டாட மாட்டோம் என்றாா்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x