Published : 19 Sep 2021 03:16 AM
Last Updated : 19 Sep 2021 03:16 AM

திருத்துறைப்பூண்டி அரசு விதைப்பண்ணையில் செப்.23-ல் யூக்கலிப்டஸ் மரங்கள் பொது ஏலம் :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளாண் உதவி இயக்குநர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

தீம்பாள்பட்டிணம் அரசு விதைப் பண்ணைக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தில் உள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் செப்.23-ம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இந்த மரங்கள் அனைத்தும் 10 ஆண்டுகள் வயதுடையவை.

அரசு விதைப்பண்ணை வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள், டெபாசிட் தொகையாக ரூ.50 ஆயிரத்துக்கான வரைவோலையை செலுத்திவிட்டு, ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு விற்பனை உறுதி செய்யப்படும். ஏலத்தொகையை அதற்குரிய சேவை வரி கட்டணத்தையும் சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும்.

இதுதொடர்பாக, கூடுதல் விவரங்களை அறிய அரசு விதைப் பண்ணை மேலாளர்- 9942844847, வேளாண்மை உதவி இயக்குநர்- 6380127078, துணை வேளாண் இயக்குநர்- 7397753312 ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x