Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

வனம் இந்தியா பவுண்டேஷனுக்கு பசுமை ரதம் வழங்கிய ராம்ராஜ் காட்டன் நிறுவனம்

கோவை

வனம் இந்தியா பவுண்டேஷன், கடந்த 5 ஆண்டுகளாக பல்லடம் நகரிலும், அதைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் மரங்களை நட்டு பராமரித்தல், சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு, உழவர் மேம்பாடு போன்ற பல்வேறு சேவைகளை செய்துவருகிறது.

இவ்வமைப்பின் 6-ம் ஆண்டு தொடக்க விழா, திருவள்ளுவர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோரின் உருவச் சிலை திறப்புவிழா வனாலயம் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்துல்கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற வெற்றி நலவாழ்வு மையம் திறப்பு விழாவில், சென்னை சில்க்ஸ் பி.கே.ஆறுமுகம் - சக்திதெய்வாணை தம்பதி, சுலோசனா காட்டன் கண்ணன், ஆஷா கிருஷ்ணகுமார், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.சக்திவேல், பல்லடம் பொன்னி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பொன்னி சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திருநாவுக்கரசர் வரன்பாளையம் திருமடம் மெளன சிவாச்சல அடிகளாரும், பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரும் வாழ்த்துரை வழங்கினர்.

மாலையில் சிறுவர் விளையாட்டு அரங்கம், பெரியோர் உடற்பயிற்சி மையம், பசுமை ரதம் தொடக்க விழா நடைபெற்றது. மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் நாயர் தலைமையில் நடிகர் எஸ்.கார்த்திக் காணொலி மூலமாக பசுமை ரதத்தை தொடங்கிவைத்தார். நவீன தொழில்நுட்பங்களோடு ரூ.75 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட பசுமை ரதத்தை, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், வனம் இந்தியா பவுண்டேஷனுக்கு அர்ப்பணித்து பேசும்போது, “ராம்ராஜ் காட்டன் பல்லடம் ஷோரூம் லாபம் முழுவதும் வனம் இந்தியா பவுண்டேஷனுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது” என்றார். ஏற்பாடுகளை பவுண்டேஷன் தலைவர் கே.சின்னசாமி, செயலாளர் வி.சுந்தர்ராஜ், செயல்தலைவர் கே.பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x