Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM

மதுரையில் மீனாட்சி ஃபேன் ஹவுசின் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி :

மதுரையின் மையப் பகுதியில் 7 ஆயிரம் சதுரடி பரப்பளவில் மதுரா கோட்ஸ் எதிரில் நியூ ஜெயில் ரோட்டில் மீனாட்சி ஃபேன் ஹவுசின் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி விற்பனை நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி விற்பனையில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளின் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் ரூபி புட் புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சம்பத், விஷால் குழும நிறுவனங்களின் இயக்குநர் ராஜரத்தினம் இளங்கோவன், எஸ்.வி.எஸ். புட்ஸ் நிறுவனங்களின் மேனேஜிங் பார்ட்னர் சூரஸ் சுந்தர சங்கர் ஆகியோர் தலைமை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். எல்.ஜி. நிறுவனத்தின் 65 இன்ச் நானோசெல் 8 கே டிவி, 70 இன்ச் 4கே டிவி, சாம்சங் நிறுவனத்தின் டபுள் டோர் ஃபிரிட்ஜ் மற்றும் 5 ஜி ப்ளிப் போன், போஸ்க் நிறுவனத்தின் ப்ரன்ட்லோட் வாஷிங் மிஷின் ஆகியவற்றை தலைமை விருந்தினர்கள் அறிமுகம் செய்து வைத்தனர்.

விழாவுக்கு வந்திருந்தோரை  மீனாட்சி ஃபேன் ஹவுஸின் நிர்வாக இயக்குநர் சிஎன். சரவணன் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x