Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM

மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுசரிப்பு :

மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர்.

மதுரை

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தையொட்டி மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது சிலைக்கு மதிமுக சார்பில் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், மதுரை மாநகர் பிரிவு சார்பில் பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாநில செயற் குழு உறுப்பினர் பூர்ணகலா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர் துணைத் தலைவர் வைரம், மாநகர இணை பொருளாளர் வெங்கட் ராஜ், அலுவலக செயலாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், பல்வேறு அமைப் பினர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x