Published : 19 Sep 2021 03:13 AM
Last Updated : 19 Sep 2021 03:13 AM

டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே - தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் : வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

பிரதமர் மோடியின் 71-வதுபிறந்தநாளை முன்னிட்டு கோவைஅம்மன்குளம் பகுதியில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று நடைபெற்றது. அதை தொடங்கிவைத்த பின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது:

பெண்களுக்காக மருத்துவ சிகிச்சை முகாம் மூலம்பரிசோதனை மட்டுமின்றி, சிகிச்சைதேவைப்பட்டால் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்செய்யப்படும். பொதுமக்களிடையே இன்னமும் கரோனா தடுப்பூசி தொடர்பான அச்சம், தயக்கம் உள்ளது. பெண்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், டாஸ்மாக் செல்லும் ஆண்களுக்கு டாஸ்மாக்கில் மது அருந்த முடியாதோ என்ற அச்சம் உள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே தடுப்பூசி முகாம் அமைத்தால் விரைவாகதடுப்பூசிகளை செலுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x