Published : 06 Aug 2021 03:20 AM
Last Updated : 06 Aug 2021 03:20 AM

தமிழகப் பல்கலைக்கழகங்களில் - தமிழர் அல்லாதோரை நியமிக்கக் கூடாது : விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழகப் பல்கலைக்கழகங்களில் தமிழர் அல்லாதோர் நியமிக்கப்படக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதிலும் இருந்து 162 பேராசிரியர்கள் மனு செய்துள்ளனர். இந்த மனுக்களை தமிழக ஆளுநரால் அமைக்கப்பட்ட தேடல் குழு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

தமிழகத்தில், தமிழர்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு தமிழர் அல்லாத கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, இமாச்சலப்பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆட்சியின்போது அதிமுக அரசின் பரிந்துரைகளைப் பொருட்படுத்தாமல் தமிழக ஆளுநர் தமக்குள்ள அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டதன் விளைவாகவே தற்போதும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் எந்தவொரு சூழலிலும் தமிழர் அல்லாதோர் நியமிக்கப்படுவது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசுதான் தேர்வு செய்ய வேண்டும். அவர்களை ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x