Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

தேனி மாவட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் - கம்பம் என்.ராமகிருஷ்ணன் வெற்றி :

கம்பம் தொகுதி எம்எல்ஏவாக திமுக வேட்பாளர் என்.ராம கிருஷ்ணன் 5-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம், கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்பிஎம். சையதுகான், திமுக சார்பில் கம்பம் என்.ராமகிருஷ்ணனும் போட்டியிட்டனர். மொத்தம் 15 வேட்பாளர்கள் களம் இறங்கினர்.

இதில் திமுக வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் 42 ஆயிரத்து 413 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இவர் மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 800 வாக்குகளும், எஸ்பிஎம் சையதுகான் 62 ஆயி ரத்து 387 வாக்குகளும், அம முகவைச் சேர்ந்த சுரேஷ் 14 ஆயிரத்து 536 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அனீஸ்பாத்திமா 12 ஆயிரத்து 347 வாக்குகளும், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் வெங்கடேஷ் 4 ஆயிரத்து 647 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

என்.ராமகிருஷ்ணன் 1989-ம் ஆண்டு, பின்பு 2006, 2009-ம் ஆண்டு இடைத்தேர்தல் மற்றும் 2011-ம் ஆண்டு தேர்தலிலும் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய வெற்றி மூலம் இவர் 5-வது முறையாக கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் இவர் வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x