Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

நாகையில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகிலுள்ள சாலைகளுக்கு சீல் வைப்பு :

நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரியில் இன்று(மே 2) காலை 8 மணியளவில் தொடங்குகிறது.

இதையடுத்து, வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள நாகை கிழக்கு கடற்கரைச் சாலை, நாகை நாகூர் தேசிய நெடுஞ்சாலை, தெத்தி சாலை, ஆண்ட்ரூ சிட்டி சாலை என அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வசிப்ப வர்கள் மட்டும், தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து விட்டுச் செல்ல போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். இதேபோல, வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 2 ஏடிஎஸ்பிக்கள் தலைமையில் 800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளே கரோனா பரிசோதனை செய்துகொண்ட 300 முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் பணியில் 300 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். இதைத் தவிர 3 தேர்தல் நடத் தும் அலுவலர்கள், 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பொது பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரவீன் பி.நாயர், எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் அவ்வப்போது வந்து ஆய்வு செய்ய உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளே செல்லும்போது வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே, இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 12 போலீ ஸாருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப் பட்டது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடு துறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிக ளுக்கான வாக்கு எண்ணிக்கை மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது.

இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு (தனி), திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-திருப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்குகள், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x