Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

கரோனா தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்து - 100 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய சென்னை பெண் போலீஸார் :

கரோனா தொற்று தடுப்புப் பணியில் முன்கள வீரர்களாக காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு, சிறுவர் நல காவல் பிரிவு மற்றும் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்கள் மற்றும் பெண் போலீஸார் இணைந்து, சென்னை பெருநகரின்பல்வேறு இடங்களில் கடந்த 19-ம் தி முதல் 26-ம் தேதி வரை கரோனா தொற்று பரவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில், தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

இந்த விழிப்புணர்வு முகாம்களில், மக்கள் மிகுந்த கவனத்துடன் அரசு விதிமுறைகள் மற்றும்பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும், இதனால் தமக்கும், தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கரோனா தொற்று பரவாமல் இருக்கும் என்றும், ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம், பாதுகாப்பான, வளமான சமுதாயத்தை நிலைநிறுத்த முடியும் என்றும் போலீஸார் வலியுறுத்தினர்.

கடந்த 5 தினங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா ரோந்து வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், ஆதரவற்றவர்களுக்கு உணவும் வழங்கினர். "எந்த நேரத்திலும் பொதுமக்கள் காவல் துறையினரை தயக்கமின்றி நாடலாம்" என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x