Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

என்.ஆர் காங்., பாஜகவினரை கண்டித்து மறியல் :

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின்தலைவர் ரங்கசாமி போட்டியிடுகி றார். நேற்று வாக்குப்பதிவின் போது, ரங்கசாமிக்கு வாக்குசேகரிக்கும் விதமாக அத்தொகு தியின் முன்னாள் எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் என்.ஆர் காங்கி ரஸ் கட்சியின் சின்னம் பொருந்திய சிறிய பேப்பர்களை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளின் அருகிலும் சாலையில் வீசிவிட்டுச் சென்றனர்.புகார் அளித்தும் தேர்தல் அதிகாரி கள் அங்கு வரவில்லை.

இதனால் ஆவேசமடைந்த சிபிஐ, மநீம, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் தேர்தல் துறை அதிகாரிகளை கண்டித்து, கட்சி சின்னம் பொருந்திய சிறிய பேப்பர்களுடன் வினோபா நகர் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த தேர்தல்துறை அதிகாரிகள் மற் றும் போலீஸார் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் மறியலை கைவிட மறுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து நகராட்சி உழியர்கள் வரவழைக்கப்பட்டு, பேப்பர்கள் சுத்தம் செய்யப்பட்டன. இதன் பின்னர் அவர்கள் அனைவ ரும் மறியலை கைவிட்டனர். இத னால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதேபோல் லாஸ்பேட்டை ஏர் போர்ட் சாலையில் உள்ள குளுனி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை பார்வையிட என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் வந் தார். அவருடன் ஆதரவாளர்களும் கூட்டமாக வந்தனர். இதனை கண்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஏர்ப்போர்ட் சாலையில் சில நிமி டங்கள் மறியலிலும் ஈடுபட்டனர்.

திருபுவனை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன் னாள் அமைச்சர் அங்காளன் தனது காரில் திருவாண்டார்கோயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டுவிட்டு வந்தார். அப்போது, அத்தொகுதியில் போட்டி யிடும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ கோபிகாவின் ஆதரவாளர்கள் 10-க்கும் மேற் பட்டோர் அங்காளனின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் காரின் பக்கவாட்டு கண் ணாடி உடைந்தது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் உழவர்கரை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சிவசங்கரன் மேரி உழவர்கரை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட தனது காரில் வந்தார். காரை அங் குள்ள சாலையோரம் நிறுத்திவிட்டு வாக்குச்சாவடிக்குள் சென்றார். பின்னர் சிலமணி நேரத்தில் அவர் திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்பக்கம் சேதமடைந்து, கண்ணாடி நொறுங்கிய நிலையில் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருண்(எ)முருகன் சுயேட்சையாக போட்டியி டுகிறார். இவர் நெல்லித்தோப்பு ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது வாக்குச்சாவடி அருகி லேயே பாஜகவைச் சேர்ந்த சிலர்வாக்குகள் சேகரித்துக் கொண்டி ருப்பதை கண்டு அதிருப்தி அடைந்தார்.

இதனை தட்டிக்கேட்ட அவ ருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வேட்பாளர் அருண்(எ) முருகன் பள்ளியின் எதிரில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். உருளையன்பேட்டை போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திசம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்வதாக உறுதி அளித் ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x