Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் மேலிட பார்வையாளர் சி.டி.ரவி நம்பிக்கை

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பாஜக மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி கூறினார்.

மதுரை பாண்டி கோயில் அருகே பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர் எச்.ராஜா, துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச் செயலர் நிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் சி.டி.ரவி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ஜன.29 முதல் 31 வரை தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும். பாஜக நடத்திய வெற்றிவேல் யாத்திரை, நம்ம ஊர் பொங்கல் விழாக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

தமிழகத்துக்கு மட்டும் பிரதமர் மோடி ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் கோடி அளவுக்கு பல்வேறு திட்டங் களை வழங்கியுள்ளார். இவை மக்களைச் சென்றடைந்துள்ளன. இதனால் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றார்.

பின்னர் அண்மையில் தாக்கு தல் நடந்த மேலமடையில் உள்ள மதுரை புறநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தை சி.டி.ரவி பார்வையிட்டார். அப்போது மாவட்டத் தலைவர் மகா சசீந் திரன், ஊடகப் பிரிவு தலைவர் தங்கவேல்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x