Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM

அலைக்கழிக்கப்படும் விவசாயிகள் நகையை வாங்குவது கூட்டுறவு சங்கம்; பணம் தருவது மத்திய வங்கி ஒரு மாதத்துக்கு மேல் தாமதமாக பட்டுவாடா

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நகையை அடமானம் வைத்தால், அதற்கான தொகையை மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று வாங்கவேண்டும் என்ற உத்தரவால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அத்துடன், ஒரு மாதத்துக்கு மேல் தாமதமாக பணம் வழங்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.

புதூர் வட்டாரத்தில் 44 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகும். இங்குள்ள மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை பெய்யும் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றனர். பயிர் சாகுபடி செலவுக்காக தங்கள் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில், தங்கள் நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுவது விவசாயிகளின் வழக்கம்.

ஆனால், நடப்பாண்டு முதல் கிராமப்புறங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கடன்சங்கங்களில் விவசாய நகைக்கடன் கேட்டுச் சென்றவர்களுக்கு, நகையையும், பயிர் அடங்கல் நகலையும் பெற்றுக்கொண்ட கூட்டுறவு சங்க அலுவலர்கள், அதற்குரியகடன் தொகையை மாவட்ட மத்திய கூட்டுறவுவங்கிகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றனர். இதன் அடிப்படையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைகளை அடகு வைக்கும் விவசாயிகள், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு சென்று பணத்தை பெற வேண்டியுள்ளது. புதூர் வட்டாரத்தில் உள்ள மாவில்பட்டி,வெம்பூர், மெட்டில்பட்டி, அழகாபுரி, சிவலார்பட்டி, முத்துச்சாமிபுரம், முத்தையாபுரம்என 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில்உள்ள விவசாயிகள், நகைகளை அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அடமானம் வைத்து, ஒரு மாதகாலத்துக்கு மேலாகியும், உரிய கடன் தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கரிசல் பூமி விவசாயிகள்சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, ``தற்போது மழைக்காலம் என்பதால், விவசாயப்பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டியவேளையில், கடன் தொகை பெறுவதற்காக வங்கி வாசலில் காத்திருக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது. 7 மாத காலத்துக்கு மட்டுமேவட்டியில்லாமல் நகைக்கடன் வழங்கப்படுகிறது. தொடக்க வேளாண் கூட்டுறவுகடன் சங்கத்தில் நகை அடமானம் வைத்து,மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணம் பெற ஒரு மாத காலமாகிறது. இதனால், 6 மாத காலத்துக்கு மட்டுமே வட்டியில்லாமல் கடன் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. எனவே,பழைய முறைப்படி அந்தந்த தொடக்கவேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்திலேயே நகைக் கடனுக்கான தொகையை வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x