Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

பையர்நத்தத்தில் நாளை கருத்தடை சிகிச்சை முகாம்

தருமபுரி மாவட்டம் பையர்நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை(4-ம் தேதி) ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம் நடக்க உள்ளது.

இது தொடர்பாக தருமபுரி மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான நவீன வாசக்டமி என்ற கருத்தடை சிகிச்சை முகாம் நாளை(4-ம் தேதி) நடக்க உள்ளது. அளவான குடும்பத்தை திட்டமிட விரும்பும் குடும்பங்களில் பெண்களின் சுமையை குறைக்க ஆண்களும் முன்வர வேண்டும் என்பதற்காக சீன தேசத்து வாசக்டமி என்ற கருத்தடை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களைக் கொண்டு இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு அன்றே ரூ.1100 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அறுவை, தையல், தழும்பு, வலி இல்லாத சிகிச்சை இது. சிகிச்சை முடிந்து ஓரிரு மணி நேரத்தில் வீடு திரும்பி அன்றாடப் பணிகளிலும் ஈடுபடலாம். இந்த சிகிச்சை குழந்தை பிறப்பை மட்டுமே கட்டுப்படுத்தும், இல்லறத்துக்கு தடையில்லாதது. கூடுதல் விவரங்கள் அறிய 98941 43410 மற்றும் 99940 43535 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x