Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

கடன் தொல்லையால் மனைவி, மகளுடன் பால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கோவையில் கடன் தொல்லை காரணமாக பால் வியாபாரி, மனைவி, மகள் ஆகியோர் விஷம் குடித்து உயிரிழந்தனர்.

கோவை மருதமலை அடிவாரம் அமரஜோதி நகரைச் சேர்ந்தவர் சிவமுருகன்(50). இவரது மனைவி வைரராணி(40), மகள்கள் யுவ(22), ஹேமா(19). யுவ பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஹேமா 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சிவமுருகன் பால் வியாபாரத்துடன், பைனான்ஸ் தொழிலும் செய்துவந்தார். இவரிடம் கடன் வாங்கியவர்கள், அதை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால், தன்னிடம் சீட்டு போட்டவர்களுக்கு தொகையை தர முடியாமல் சிவமுருகன் மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை வாழைப்பழத்தில் விஷம் தடவி மனைவி மற்றும் இரு மகள்களுக்கு அளித்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார். சிறிதுநேரத்தில் சிவமுருகன், வைரராணி, யுவ ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஹேமா வாழைப்பழத்தை சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், வடவள்ளி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்வதற்கு முன்னர் சிவமுருகன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாகவும், தான் யார் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும், தனக்கு பணம் தர வேண்டியவர்கள் யார் என்ற விவரம் எழுதப்பட்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x