

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களும் தங்களின் விடுதியின் பெயர், முகவரி, அறைகளின் எண்ணிக்கை, வசதிகள், தொலைபேசி எண்கள், இணையதள மற்றும் மின்னஞ்சல் முகவரி முதலான விவரங்களை www.nidhi.nic.in என்ற வலைதள முகவரியில் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்த பின்னர், மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் பதிவேற்றம் செய்யப்பட்ட விடுதிக்கென பிரத்யேக பதிவு எண் வழங்கப்படும். தொடர்ந்து www.saathi.qcin.org என்ற வலைதள முகவரியில், சுய சான்றொப்பம் என்ற பிரிவில் பிரத்யேக பதிவு எண்ணை உள்ளீடு செய்து, தங்கள் விடுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு செய்யப்படும் வசதிகள் மற்றும் கரோனா காலகட்டத்தில் பின்பற்றப்படும் நெறிமுறைகளை தேர்வு செய்து உள்ளீடு செய்தால், தங்களது விடுதியின் பெயரில் சுய சான்றிதழ் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் வழங்கப்படும்.
இவ்வாறு, பதிவேற்றம் செய்த விவரங்களை தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலகத்துக்கு tothoothukudi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பி வைத்திட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0461-2341010ஐ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.