Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

10 சதவீத போனஸ் அறிவிப்பை கண்டித்து அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவித்துள்ளதை கண்டித்தும், 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தியும் கோவில்பட்டியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு, தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் என்.சிவக்குமார் தலைமை வகித்தார். தொமுச மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் ஆர்வெங்கடசாமி, சிஐடியு கிளைத் தலைவர் பி.கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x