திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் மறியல் :

திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் மறியல் :
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்துார் ஒன்றியம் ராவுத்தம்பட்டி ஊராட்சி வாலேரி என்ற ஏரி கனமழையால் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. வாலேரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை கொரட்டி ஏரிக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, வாலேரி முதல் கொரட்டி ஏரி வரை கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும், இடையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பைப்லைன் புதைத்து அதன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், குடியிருப்பு பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளம் மூடாததால் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை எலவம்பட்டி அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்த கிராமிய காவல்துறையினர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in