Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM

சிறார் காவல் பிரிவு போலீஸாருக்கு திறன் வளர் மேம்பாட்டு பயிற்சி :

தருமபுரியில் நேற்று சிறார் காவல் பிரிவு அலுவலர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த திறன் வளர் பயிற்சி அளிக்கப்பட்டது.

தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டியில் உள்ள காவல்துறை ஆயுதப்படை வளாக மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன், தருமபுரி மாவட்ட காவல்துறை இணைந்து இந்த திறன் வளர் மேம்பாட்டு பயிற்சியை அளித்தன. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி குணசேகரன், தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவகாந்தி, குழந்தைகள் நலக் குழு நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில், வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், வீட்டு வேலைக்கு செல்கின்ற குழந்தைகள், உடல் மற்றும் மனதளவில் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள், குழந்தைத் திருமணம், பாலியல் வன் கொடுமைகளுக்கு ஆளாகும் குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் போன்ற குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளை கையாளும்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் முறைகள், குற்றங்கள் தொடர்பாக உரிய சட்டப் பிரிவுகளை முறையாகவும், கவனமாகவும் பயன்படுத்துதல் போன்றவை குறித்து போலீஸாருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x