Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சுமார் 500 ஆக்கிரமிப்பு வீடுகள் நீரில் மூழ்கின :

வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது.படம்: எம்.முத்துகணேஷ்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள381 ஏரிகளில் 367 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி 2 வாரங்களுக்கு முன் முழுமையாக நிரம்பியுள்ளது. இந்நிலையில் அருகாமையில் உள்ள ஏரிகளும் நிரம்பி தாமல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், அதிகளவு தண்ணீர் கலங்கள் வழியாக வேகவதி ஆற்றில் வெளியேறுகிறது. இதனால், ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள்வெள்ளம் புகுந்தது. ஆற்றங்கரையோரம் உள்ள 500 ஆக்கிரமிப்பு வீடுகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டே இப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, 1400 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி மக்களை கீழ்கதிர்பூர் பகுதியில் மறு குடியமர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, பொதுமக்களை மறு குடியமர்த்தவோ துரித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆற்றங்கரையோர பகுதிமக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆக்கிரமிப்பு காரணமாகஅதிக மழை பெய்தால் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கும் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x