Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM

மார்த்தாண்டம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு - ரூ.3.57 கோடியில் புதிய கட்டிடம் : காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வு தளத்துடன் கூடிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மார்த்தாண்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை, விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். திருநெல்வேலி மண்டல துணைப்போக்குவரத்து ஆணையர் ரஜினிகாந்த், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மன்னர் மன்னன் (மார்த்தாண்டம்), சந்திரசேகர் (நாகர்கோவில்) மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள இவ்வலுவலகம் தரைத்தளம், முதல்மாடி, 2-வது மாடி என மொத்தம் 9,640 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அறை, பழகுனர் உரிமம், ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு ஆகியவை அமைந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x