Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

ராணுவ கல்லூரியில் சேர மாணவிகளுக்கு அழைப்பு :

ராணுவ கல்லூரியில் சேர மாணவிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள் ளது.

புதுவை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூ னில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர்வதற்கு மாணவிகள் மட்டும் நவம்பர் மாதம் 15- தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த மாணவர் களுக்கு டிசம்பர் 18-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பப் படிவம் முந்தைய ஆண்டுகளின் வினாக்களை ஆன்லைன் மூலம் பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் இணை இயக்குநர் தேர்வு பிரிவு அலுவலகம், 4-ம் தளம், காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், அண்ணா நகர், புதுவை என்ற முகவரிக்கு நவம்பர் 15-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x