Published : 12 Oct 2021 03:14 am

Updated : 12 Oct 2021 03:14 am

 

Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

பெண் குழந்தைகள் கவுரவிப்பு :

கோவில்பட்டி

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி வரலாறு மன்றம் சார்பில் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து ஆரத்தி எடுத்து கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். சமூக தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன், பள்ளி தலைமை ஆசிரியை செல்வி முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் கணேசன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் பெண் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து கவுரவித்தனர். பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவும், பெண் குழந்தைகளுக்கு எதிரான அனைத்து செயல்களையும் தடுத்து நிறுத்தவும், பெண் குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி முதல்வர் மீனா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x