Published : 05 Aug 2021 03:20 AM
Last Updated : 05 Aug 2021 03:20 AM

புதுப்பாளையம் கிராமத்தில் பெண் கொலை : 3 தனிப்படை அமைத்து விசாரணை

கண்ணமங்கலம் அருகே புதுப் பாளையம் கிராமத்தில் பெண் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டது குறித்து 3 தனிப் படை அமைத்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தி.மலை மாவட்டம் கண்ணமங் கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி(45). இவரது கணவர் இருசப்பன் கடந்த 2006-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரி ழந்துவிட்டார். புதுப்பாளையம் கிராமத்தில் இருந்து கூலி வேலைக்கு செல்வதுடன் ஒண்ணுபுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மகள் தீபாவுடன் சாந்தி தனியாக வசித்து வந்தார்.

இயற்கை உபாதை கழிப்பதற் காக வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு வெளியில் சென்றவர் நேற்று காலை 6 மணி ஆகியும் வீடு திரும்ப வில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டும் பேச முடியவில்லை என்பதால் வீட்டில் தனியாக இருந்த மகள் தீபா அழுது கொண்டிருந்தார்.

இதுகுறித்து, அக்கம் பக்கம் வசிப்பவர்கள் சென்னையில் வசிக்கும் சாந்தியின் சகோதரி ஜெயந்திக்கு தகவல் தெரிவித் துள்ளனர். அவர், வேலூர் மாவட்டம் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதரர் சரவணன் (37) என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து சரவணன் புதுப்பாளையம் கிராமத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.

அதேநேரம், புதுப்பாளையம் கிராமத்தில் பலராமன் என்பவரது விவசாய நிலத்தில் சாந்தி கை, கால், காது, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பான தகவலின்பேரில், ஆரணி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மற்றும் கண்ணமங்கலம் காவல் துறையினர் விரைந்து சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாந்தி கொலையான இடத்தில் இருந்து அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது காதில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன.

கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் அவரது செல்போனில் கடைசியாக பேசிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், ஆய்வாளர்கள் முத்துக்குமார், சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே தந்தையை இழந்து தாயுடன் சிறுமி தீபா வசித்து வந்தார். தற்போது, தாயும் உயிரிந்துவிட்டதால், தீபா ஆதரவற்றவராய் நிற்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x