Published : 01 Aug 2021 06:31 AM
Last Updated : 01 Aug 2021 06:31 AM

சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்தநாள் விழா :

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு இடலாக்குடியைச் சேர்ந்த சதாவதானி செய்குதம்பி பாவலர் இலக்கண, இலக்கியங்களுடன் தமிழ் கவிதைகள் படைப்பதில் வல்லமை பெற்றிருந்தார். இளம் வயதிலேயே கவிதை பாடும் திறன் பெற்றிருந்ததால் அனைவராலும் பாவலர் என போற்றப்பட்டார். சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றார்.

சதாவதானி செய்குதம்பி பாவலரின் 148-வது பிறந்த நாளைமுன்னிட்டு நாகர்கோவில் இடலாக்குடியில் சதாவதானி செய்குதம்பி பாவலர் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர்மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவர் கூறும்போது, “சதாவதானி 1950-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி மறைந்த நிலையில், அவரது பணியினை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு பிறந்த நாளும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சதாவதானி பாவலர் எழுதிய நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டது. அவருக்கு தபால் தலை வெளியிடப்பட்டது. அவரது புகழ் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்றார். ஆட்சியர் மா.அரவிந்த், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x