Published : 28 Jul 2021 03:19 AM
Last Updated : 28 Jul 2021 03:19 AM

விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது குற்றச்செயல் : திருப்பத்தூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் தகவல்

விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றச்செய லாகும் என திருப்பத்தூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பத்தூர் மின்பகிர்மான வட்டம், பள்ளிகொண்டா மின்கோட்ட அலுவலகம் சார்பில் ஆம்பூர் எஸ்.கே.ரோடு சந்திப்பில் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மின்பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் வேல் முருகன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பேசும்போது, ‘‘விவசாய நிலங் களில் விலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றமாகும். உயர் அழுத்த மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்களை கட்டும் போது போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். மழை, பெருங்காற்று காரணமாக அறுந்து கீழே விழுந்து கிடக்கும் மின்சார கம்பிக்கு அருகில் யாரும் நெருங்கி செல்லக் கூடாது.

மின்வயர்கள் அறுந்து கிடந்தால் உடனடியாக மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பத்தில், மின் கம்பிகளுக்கு கீழே, இழுவை கம்பிகளில் (ஸ்டே)கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது. மழைக் காலங்களில் மின்கம்பம், மின்மாற்றி அருகே செல்லக்கூடாது.

இடி, மின்னல், மழைக் காலங்களில் வீட்டில் உள்ள தொலைக் காட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் ஆகிய மின் சாதனப் பொருட்களுக்கான மின் இணைப்பை துண்டிப்பதன் மூலம் மின் விபத்து ஏற்படுவதையும், மின்சாதனங்கள் பழுதடைவதை யும் தவிர்க்கலாம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கொண்டா மின் கோட்ட செயற் பொறியாளர் எஸ். விஜயகுமார், ஆம்பூர் உதவி செயற்பொறியாளர் எஸ்.அன்பரசன், உதவி பொறி யாளர்கள் கே.கார்த்திகேயன், கே. வெங்கடேசன், எஸ். தமிழ்வாணன், கே.மோகன், எம்.சாந்தி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x