Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

 நாராயணி வித்யாலயா பள்ளியில் : பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி :

வேலூர்

வேலூர் புரம் நாராயணி வித்யாலயா பள்ளியில் 2020-21-ம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

பொதுத் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற அனைத்து மாணவர் களையும் சக்தி அம்மா, பள்ளி தாளாளர் சுரேஷ்பாபு ஆகியோர் வாழ்த்தினர். பள்ளி அளவில் 581 மதிப்பெண் பெற்று மாணவி நிஷா முதலிடத்தையும், 554 மதிப்பெண் பெற்று மாணவர் கிரண்குமார் 2-ம் இடத்தையும், 549 மதிப்பெண் பெற்று சரண்யா 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

கரோனாவால் பெற்றோரின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்விக்கட்டணத்தில் சலுகைகள் வழங்கப் பட்டுள்ளதாகவும், பிற பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நாராயணி வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்விக்கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x