Published : 17 May 2021 03:15 AM
Last Updated : 17 May 2021 03:15 AM

பூந்தமல்லி அருகே - மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு :

பூந்தமல்லி அருகே மலையாள பிக்பாஸ் செட்டில் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி சார்பில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்நிகழ்ச்சி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப் பாகி வருகின்றன.

இந்நிலையில், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்வுக்கான படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தன. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வந்தார்.

இச்சூழலில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் மற்றும் அந்நிகழ்ச்சியின் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு புதன் கிழமைதோறும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்டனர்

அந்த வகையில், கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொழில்நுட்பக் கலைஞர்கள் 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், போதிய தடுப்பு நடவடிக்கைகளோடு, படப்பிடிப்பு தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x