Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

கோவளம் ஊராட்சி பொதுமக்களுக்காக - தனியார் அறக்கட்டளை சார்பில் அவசரகால சேவை மையம் தொடக்கம் :

கோவளம் ஊராட்சியில் அவசரகால சேவை மையத்தை தொடங்கிவைத்த காவல் ஆய்வாளர் மணிமாறன் பொதுமக்களுக்கு 15 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.

திருப்போரூர்

கோவளம் ஊராட்சியில் கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காகவும் மருத்துவம்உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காகவும்பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேவரக்கூடாது என்பதற்காகவும், தனியார் அறக்கட்டளை சார்பில் அவசரகால சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் கோவளம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக எஸ்டீஎஸ் அறக்கட்டளை மற்றும் ஸ்கோப் நண்பர்கள் குழு சார்பில் அவசரகால சேவைமையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் தொடக்க நிகழ்ச்சி, அறக்கட்டளையின் தலைவர் ஜா.சுந்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் மணிமாறன் பங்கேற்று அவசரகால சேவை மையத்தை தொடங்கிவைத்தார்.

இந்த சேவை மையத்தில், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச ஆம்புலன்ஸ் சேவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக, சேவை மையத்தை தொடர்பு கொள்வதற்காக 9042117888, 9710923888, 7305265488 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அனைத்து குடும்பங்களுக்கும் 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய ‘பை’ வழங்கப்பட்டது.

இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர்சுந்தர் கூறியதாவது: மேற்கண்ட சேவை மையம் மூலம் கோவளம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும். பால், முகக்கவசம், ஆம்புலன்ஸ் சேவை, மருந்து மாத்திரை என அனைத்தையும் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். முக்கியமாக அவசரத் தேவைக்கான ஆக்சிஜன் வசதி உள்ளது.

கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வீட்டை விட்டு பொதுமக்கள் எந்ததேவைக்காகவும் வெளியே வரக் கூடாது என்பதே சேவை மையத்தின் முக்கிய நோக்கம். ஊரடங்கு முடியும் வரை இச்சேவை மையம் செயல்படும். மேற்கண்ட சேவைகளை செய்வதற்காக 16 தன்னார்வலர்களை நியமித்துள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x