Published : 04 May 2021 03:13 am

Updated : 04 May 2021 03:13 am

 

Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

குன்னூரில் 85 மி.மீ. மழை பதிவு :

குன்னூர்

நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி,மின்னலுடன் கன மழை கொட்டி தீர்த்தது. குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ட்ரம்ளா பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து, சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொக்லைன் உதவியுடன் இடிபாடுகளை அகற்றியபின்பு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. நேற்று காலை வரையிலான நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக 18.42 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக குன்னூரில் 85 மி.மீ. மழை பெய்துள்ளது. உலிக்கல், எடப்பள்ளி, குன்னூர் ஊரகப் பகுதிகளில் தலா 75, கீழ் கோத்தகிரியில் 69, பர்லியாறில் 58, கோத்தகிரியில் 50, கோடநாட்டில் 15, கெத்தையில் 12, உதகையில் 2.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x