Last Updated : 05 Apr, 2021 03:16 AM

 

Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

தேர்தல் தோறும் வெற்றியை நிர்ணயிப்பதில் - குமரியில் முக்கியப் பங்கு வகிக்கும் மீனவர் வாக்குகள் : 1,45,645 வாக்குகளைப் பெற கட்சிகள் இடையே கடும் போட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப் பதில் மீனவர் சமுதாய வாக்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 1,45,645 மீனவர்களின் வாக்குகளைப் பெற கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

ஒற்றுமை, ஒருங்கிணைந்த முடிவு போன்றவற்றால் கன்னியா குமரி மாவட்டத்தில் மீனவர்களின் வாக்குகள் சட்டபேரவை, மக்களவை தேர்தல்களில் வேட்பாளர்களி்ன வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக திகழ்கின்றன.

மாவட்டம் முழுவதும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண் ணிக்கை 15,71,651. இதில் 1,45,645 பேர் மீனவர்கள் என வாக்காளர் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மாவட்டத் தில் உள்ள மொத்த வாக்காளர் களில் இது 10 சதவீதம் ஆகும். மறைமாவட்டம் மற்றும் பங்குபேரவை வழி காட்டுதலின்படி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு அனைத்து மீனவர்களும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே வாக்களிப்பர். பங்குப்பேரவை சார்ந்த மீனவர்கள் அல்லாத சமூகத்தினரும் இந்த முடிவுக்கேற்ப வாக்களிப்பார்கள். இதனால் தான் மீனவர்களின் வாக்குகள் குமரி மாவட்டத்தில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெற்று திகழ்கின்றன.

நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு தொகுதியில் மட்டும் மீனவர் வாக்குகள் குறைந்த அளவு உள்ளன. இதில் உள்நாட்டு மீனவர்களும் அடங்குவர்.

சரக்கு பெட்டக துறைமுகம்

கன்னியாகுமரி சரக்கு பெட்டக துறைமுகம் உட்பட தங்களது வாழ்வாதாரத்தை பாதிப்பதாக கருதும் எந்த திட்டத்துக்கும் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவிப்பது, கடலரிப்பு தடுப்பு சுவர், துறைமுக விரிவாக்கம் என தங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளிடம் ஒருமித்த குரலில் முன்வைத்து நிறைவேற்றுவதில் மீனவ மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் பிற சமூகத்தினர் மற்றும் அரசியல்வாதிகள் மத்தி யில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை.

தற்போதைய தேர்தலிலும் சரக்கு பெட்டக துறைமுகத்துக்கு மீனவர்கள் ஒருங்கிணைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீனவர்களின் வாக்குகளை மொத்தமாக பெறுவதற்கு தொகுதி தோறும் அனைத்து கட்சியினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். உரிமையை நிலைநாட்ட தங்கள் வசம் இருக்கும் வாக்குகளை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தும் மீனவர்களின் யுக்தியை பிற சமூகத்தினரும் இதுபோல் ஒற்றுமையாக பயன்படுத்துவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

தொகுதி வாரியாக மீனவர் வாக்கு

கன்னியாகுமரி29,243(10%), நாகர்கோவில்8,082 (3%) குளச்சல்45,431(17%)

பத்மநாபபுரம்2,383 (1%)

விளவங்கோடு7,424(3%)

கிள்ளியூர் 53,082(21%)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x