Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM

திமுக அயலக அணி உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

திருவாரூர்: திமுக அயலக அணிக்கு உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதுகுறித்து திமுக அயலக அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ தெரிவித்துள்ளது:

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மார்ச் 1-ம் தேதிமுதல் திமுக அயலக அணி உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கி யுள்ளது. இதில், ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். உலகத் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் இடையிலான உறவுப் பாலமாக இந்த அணி திகழும். இந்த அணியில் தங்களை இணைத்துக் கொண்டு அயலகத் தமிழர்களின் நலனுக்கும், தாய் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x