Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள் புதுவையில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை மார்க்சிஸ்ட் கம்யூ. கடும் கண்டனம்

புதுச்சேரி அரசின் ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக இருந்த மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கண்டனப் பேரணியில் பங்கேற்றோர்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசின் ஆட்சி கவிழ்ப் புக்கு காரணமாக இருந்த மத்தியபாஜக அரசை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு சார்பில் மக்கள் கோரிக்கை பேரணி நேற்றுநடைபெற்றது. இதில் பங்கேற் றவர்கள், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கூறினர்.

இந்தக் கண்டனப் பேரணி, புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி மிஷன் வீதியில் நிறைவடைந்தது. பேரணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.

பேரணியை முடித்து வைத்து கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சௌந்தர்ராஜன் பேசுகையில், "போராடி வரும் விவசாயிகளை அழைத்து பேசுவதற்கு கூட முன்வராத மத்திய மோடி அரசு செயல் பட்டு வருகிறது. விவசாயிகளின் போராட்டத்தை சகிக்க முடியாமல் சாலையில் ஆணி அடித்து ஒடுக்கநினைக்கும் மோடியின் ஆட்சியை, சவப்பெட்டியில் வைத்து விரை வில் விவசாயிகள் ஆணி அடிப் பார்கள்.

புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை செயல்பட விடாமல் தடுப்பதோடு ஜனநாயகப் படு கொலையை அரங்கேற்றி வருகின் றனர். வருகின்ற பொதுத்தேர்தலில் புதுச்சேரி மக்கள் மத்திய மோடி அரசுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் சுதா சுந்தரராமன் பேசுகையில், "சிறு குறு வணிகர்கள் முடங்கியுள்ளன. ஆனாலும், இந்த காலகட்டத்தில் அம்பானி, அதானிக ளின் வியாபாரம் மட்டும் 100மடங்கு உயர்ந்துள்ளது. விலைப்பொருட்களின் விலை கடுமை யாக உயர்கிறது ஏழை எளியமக்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த தேர் தலில் டெபாசிட்டை இழந்த பாஜகவினர் கொல்லைப்புறமாக சட்டப்பேரவையில் நுழைந்து, இன் றைக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியையே கலைத்து, ஜனநாயகத்தை படுகொலை செய்திருக் கின்றனர். இதற்கு புதுச்சேரி மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

தேர்தலில் டெபாசிட்டை இழந்த பாஜகவினர் கொல்லைப்புறமாக சட்டப்பேரவையில் நுழைந்து, ஆட்சியை கலைத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x