Published : 18 Feb 2021 03:19 AM
Last Updated : 18 Feb 2021 03:19 AM
மதுரையில் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன், துணைத் தலைவர் ஹரிகரன் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதற்காக சேதுபதி மேல்நிலைப் பள்ளி பகுதியிலிருந்து சிம்மக்கல் நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டு வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாஜகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கே.கே.சீனிவாசன்,துணைத் தலைவர் கராத்தே ராஜா உட்பட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT