Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

 ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோருக்கான வணிக காப்பகம் திறப்பு விழா

கோவை  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், வணிக காப்பகம் (ஸ்டார்ட் அப் அண்ட் இன்குபேஷன் சென்டர்) திறப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு வரவேற்றார். எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமைவகித்தார்.

கோவை இன்டோ செல் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சேர்மன் ஜே. கணேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் .

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள், தொழில் முனைவோர் களாக விளங்கும் முன்னாள் மாணவிகள் அபர்ணா, நிவேதா, மோனிஷா மற்றும் மின்னணுவியல் மற்றும் கருவியியல் துறை இணைப் பேராசிரியர் திருக்குறள்கனி ஆகியோர் இணைந்து டெக்ட்ஸோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிறுவனமானது ஸ்மார்ட் தெர்மல் சேனிடைசர், டாட்டிக் வோல்டேஜ் ரெகுலேட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் வாட்டர் லெவல் கண்ட்ரோலர் ஆகிய கருவிகளை உருவாக்கியுள்ளது. மேலும் இக்குழு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் , பெங்களூரு மற்றும் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் வழிகாட்டுதலின் பேரில் சுமார் ரூ.25 லட்சம் நிதி உதவிபெற்று, போல் லைன் பால்ட் டிடக்சன் சிஸ்டம் என்னும் மின் பகிர்மான கருவியை உருவாக்கி மக்கள் பயன்பாட்டில் வைத்துள்ளது.

இக்கருவிகளானது எரிபொருள் சிக்கனமாக உபயோகப்படுத்துதல், காற்றின் நச்சுத்தன்மை மற்றும் புகை வெளியேறும் அளவு தெரிவித்தல் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன. இச்சாதனையை நிகழ்த்திய இக்குழுவை, கல்லூரி நிர்வாக அறங்காவலர் , முதல்வர் மற்றும் மின்னணுவியல் மற்றும் கருவியியல் துறையின் தலைவர் கே. னிவாசன் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் பாராட்டினர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x