Published : 08 Dec 2020 03:15 AM
Last Updated : 08 Dec 2020 03:15 AM

உளுந்து, பாசிப்பயிருக்கு காப்பீடு செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, கம்பு,மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், குதிரைவாலி, நெல், மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்களுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்ய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உளுந்து, பாசிப் பயிருக்கஏக்கருக்கு ரூ.192, மக்காச்சோளத்துக்கு ரூ.199, கம்புக்கு ரூ.100, சோளம், எள் பயிருக்கு ரூ.104,நிலக்கடலைக்கு ரூ.245, சூரியகாந்திக்கு ரூ.136, நெற்பயிருக்கு ரூ.424, பருத்திக்கு ரூ.539, கரும்புக்கு ரூ.2,600, மிளகாய்க்கு ரூ.1,089, கொத்தமல்லிக்கு ரூ.400,வெங்காயத்துக்கு ரூ.945, வெண்டைக்கு ரூ.798, வாழைக்கு ரூ.3,115 பிரீமியம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உளுந்து, பாசிப்பயிருக்கு டிச.16-ம் தேதி பிரீமியம் செலுத்தகடைசி நாளாகும். பருத்தி, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் ஆகியவற்றுக்கு டிச.21-ம் தேதி வரையும், மல்லி, மிளகாய்க்கு ஜனவரி 30-ம் தேதி வரையும், சூரியகாந்தி, மிளகாய்க்கு ஜனவரி18-ம் தேதி வரையும், வெங்காயத்துக்கு பிப்ரவரி 15-ம் தேதி வரையும் பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உளுந்து, பாசி பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது கிராம நிர்வாக அலுவலகங்களில் அடங்கல் பெற குவிந்துள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்ட வருவாய் கிராமங்களை கவனித்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இதனால் வேலைப்பழு அதிகரித்துள்ளது. மேலும், கரோனா தொடர்பாக அரசுக்கு தகவல்களை தர வேண்டி உள்ளதாலும், மழைக்காலம் என்பதாலும், வேறு அலுவல் பணிகளாலும் உரிய நேரத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்களால் விவசாயிகளுக்கு அடங்கல் வழங்க முடியவதில்லை. சர்வர் கோளாறால் ஆன்லைன் ஆதார் சேவை தடைபடுவதால் கணினி மையங்களில் உடனுக்கு உடன் பதிவேற்றம் செய்யமுடிவதில்லை. எனவே, உளுந்து,பாசிப் பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்கவேண்டும் என விவசாயிகள்வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x