Published : 03 Dec 2020 03:16 AM
Last Updated : 03 Dec 2020 03:16 AM

நாகர்கோவிலில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில்புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேகப்படுத்தப் பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் கன்னியாகுமரி மற்றும் குளச்சல் துறைமுகப் பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திரிந்தவர்களை அப்புறப்படுத்தினர். மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் சரவணபாபு (கன்னியாகுமரி), கவிதா (தேனி), உதவிஅதிகாரி முத்துபாண்டியன் (விருதுநகர்) தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 160 பேர், பேரிடர்மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

தாழ்வான பேரிடர் பகுதிகளாககண்டறியப்பட்டுள்ளன. சுசீந்திரம்,தெரிசனங்கோப்பு, காஞ்சாம்புறம், ஆற்றூர் ஆகிய இடங்ளில் மட்டும் 40 தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

புயலின் வீரியத்தை பொறுத்து தேவைப்பட்டால் கடற்கரை மற்றும்மலையோரம், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர்கள் கடந்த இரு நாட்களாக ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம்விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்பாகஇருக்குமாறும், 4-ம் தேதி வரை வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தினர்.

மேலும் நாகர்கோவிலில் மழைநீர் அதிகமாக தேங்கும்பகுதியில் மற்றும் பழமையான கட்டிடங்களில் இருக்கும் மக்கள் நாகர்கோவில் நகரில் அமைக்கப்பட்டுள்ள இரு சிறப்பு முகாம்களில் வந்து தங்குவதற்கு வலியுறுத்தப்பட்டனர். மழை நேரங்களில்அதிகமாக நீர்தேங்கும் பறைக்கின்கால் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்தலைமையில் அலுவலர்கள் நேற்றுஆய்வு மேற்கொண்டனர்.

வடிவீஸ்வரம் ஆரம்ப பள்ளி,ஒழுகினசேரி ஆரம்ப பள்ளி ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் மக்கள் தங்குவதற்கான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புரெவி புயல் எதிரொலியாக நேற்று பகலிலேயே இருள்சூழ்ந்த தட்பவெப்பம் நிலவியது.

வருவாய்த்துறை, உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகள் சார்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்பு குழுவினர் 1-ம் தேதி மாலையில் இருந்து ஜேசிபி, லாரி, மரம் அறுக்கும் மின் இயந்திரம், மணல் மூட்டைகள், ஜெனரேட்டர்கள், மின்கம்பங்கள் போன்றவற்றுடன், பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தயார் நிலையில் உள்ளனர்.

கன்னியாகுமரி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களுக்கும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு 4-ம் தேதி வரைதடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளியூர்களில் இருந்து சுற்றுலா நோக்கத்தில் வந்து தங்கும்நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு, விடுதி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x