Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

முருகன் கோயில்களில் திருக்கல்யாணம்

பழநியில் கந்தசஷ்டி விழா நிறைவாக நேற்று மலைக் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் முதன்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மலைக்கோயில் அடிவாரம் கிரிவீதிகளில் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று மலைக்கோயிலில் மணக் கோலத்தில் சண்முகர் எழுந்தருள வள்ளி, தெய்வானையை மணமுடிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கரோனா காரணமாக பக்தர்களுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியைக் காண அனுமதி அளிக்கப்படவில்லை. முதன்முறையாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடந்தது.நேற்று வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் தி.அனிதா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x