Published : 01 Dec 2021 06:40 AM
Last Updated : 01 Dec 2021 06:40 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் ராசிபுரம் அருகே அலவாய்ப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கம், மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயரையும், அவரது உருவச்சிலையும் அமைக்க வேண்டும். பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளை மாநில அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கோட்ட அமைப்பு செயலாளர் பழனிவேல்சாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாநில நெசவாளர் பிரிவு தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT